பிணைமுறி குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி கருணாநாயக்க விடுவிப்பு!

0

மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நடத்தப்பட்ட மூன்றாவது பிணை முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி ஊடாக 15 பில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் 22 குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கு இந்த 10 பேருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் அதில் 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்கள் அனைவரையும் கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் இன்று (6) விடுதலை செய்வதாக அறிவித்தது.

temp3

மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றமே இந்த உத்தரவைப் பிறப்பித்தது.