ஹட்டன் நகர சபைத் தலைவரை இராஜனாமா செய்யுமாறு அழுத்தம் : முடியாதென நிராகரித்த பாலசந்திரன்!

- ஹில்கூல் இளைஞர்களின் ரவுடிசத்தை ஹட்டன் நகரில் அனுமதிக்க முடியாதென பொது மக்களும் வர்த்தகர்களும் கருத்து -

temp4
0
temp1

ஹட்டன் நகர சபைக்கு அருகாமையில் உள்ள உடற்பயிற்சிக் கூடாமென்று தமது வரிப்பணத்தை செலுத்தாமையின் காரணமாக அதனை மூடுவதற்கு ஹட்டன் நகர சபை தலைவர் பாலசந்திரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், உடனடியாக அந்த இடத்திற்கு நேற்று மாலை சென்ற இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உடற்பயிற்சி நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கையெடுத்திருந்தார்.

இதன் காரணமாக நேற்று மாலை ஹட்டன் நகரத்தில் பதற்றமான சூழ்நிலை தோன்றியிருந்ததுடன், நகர சபை தலைவருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் வாய்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது.

temp

இந்நிலையில், ஹட்டன் நகர சபைத் தலைவரை உடனடியாக இராஜனாமா செய்யுமாறு இ.தொ.காவின் உயர்மட்டத்தால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. என்றாலும், இராஜனாமா செய்ய முடியாடிதென்று தன்மீது எந்தவொரு தவறும் இல்லையென்றும் கட்சியின் உயர்பீடத்திற்கு ஹட்டன் நகர சபைத் தலைவர் அறிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

temp3

ஹட்டன் நகர வர்த்தகர்கள் உட்பட பொது மக்களும் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், ஹில்கூல் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் நகரத்தில் அடிதடிகளில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கூறியுள்ளனர். அதேபோன்று நகர வர்த்தகர்களும் ஹில்கூல் இளைஞர்களுக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், நகர சபைத் தலைவர் பதவியை இராஜனாமா செய்ய வேண்டாமென பாலசந்திரனுக்கு கூறியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

நகர சபைத் தலைவர் பதவியை இராஜனாமா செய்ய பாலசந்திரன கட்சியின் உயர்பீடத்திடம் மறுத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

temp2