பாரிய போராட்டத்திற்கு தயாராகும் வட கிழக்கு!

temp4
0
temp1

வட கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்களை காப்பாற்றும் போராட்டங்களிற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

வடமாகணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் முழு ஆதரவுடன் மட்டக்களப்பிலும் எதிர்வரும் நாளை (18) நடாத்துவதாக தீர்மானித்துள்ளார்கள்.

temp

இவ் கவனஈர்ப்பு போராட்டமானது தரை மற்றும் கடல் வழி என நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

temp3

அதன் அடிப்படையில்..! வெல்லாவெளியில் காலை 8 மணிக்கும், கொக்கட்டிச்சோலையில் 8.30 மணிக்கும், ஆயித்தியமலையில் 9.30 மணிக்கும், வந்தாறுமூலையில் 10.30 மணிக்கும், கிரானில் 11.30 மணிக்கும், என ஐந்து இடங்களில் விவசாயிகளால் இடம்பெறும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் அந்தந்த பகுதி பிரதேச தவிசாளர்கள் உறுப்பினர்கள், தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சி தொகுதி கிளை, பிரதேச கிளை உறுப்பினர்கள், வாலிபர் அணி உறுப்பினர்கள், மகளீர் அணி உறுப்பினர்களும் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்காளிகட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவது என முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

temp2