எரிபொருட்கள் விலை உயருமா?

temp4
0
temp1

இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் எரிபொருட்களின் விலையும் உயர்வடையம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இவற்றின் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

temp

திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்து விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

temp3

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வெகுவாக உயர்வடைந்துள்ள நிலையில், கனியவள கூட்டுதாபனம் பாரிய நட்டத்தில் இயங்குவதனால் திறைசேரியிடமிருந்து நிவாரணம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நிவாரணம் கிடைக்காவிட்டாலும் தற்போதைய விலையில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

temp2