அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

0

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறுவதற்கான குறைந்த பட்ச வயதெல்லையை 60 வயதாக அதிகரிப்பதற்கான திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வருமாறு,

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லையைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.