பட்டல்கல தோட்ட மக்களுக்கு நிர்வாகம் அநீதி!

0

“பட்டல்கல தோட்ட மக்களுக்கு, தோட்ட நிர்வாகத்தால் அநீதி இழைக்கப்படுவதற்கு நோர்வூட் பிரதேசசபை ஒருபோதும் இடமளிக்காது.” – என்று நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் கே.ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.

பட்.டல்கல தோட்டத்தில், தேயிலை மலையிலுள்ள மரங்களை வெட்டி, அனுமதி கடிதம் எழுதுவுமின்றி வாகனத்தில் ஏற்றுவதற்கு தோட்ட நிர்வாகம் கடந்த சனிக்கிழமை முற்பட்டுள்ளது

இது தொடர்பில் நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் கே.ரவி குழந்தைவேலுக்கு தகவல் கிடைத்த பின்னர் , உடனடியாக சம்பவ இடத்துக்குச்சென்ற அவர், ஆவணங்களை பரிசோதித்துள்ளார். எவையும் சட்டரீதியானவை அல்ல என்பது உறுதியாகியுள்ளது.

பின்னர் இது தொடர்பில் உடன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வாகனத்தில் ஏற்றப்பட்ட மரங்கள் இறக்கப்பட்டுள்ளன. அதேபோல தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.