நாட்டை ஆட்சிசெய்ய முடியாவிட்டால் போய்விடுங்கள்!

0

” ஆளமுடியாவிட்டால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாவிட்டால் போய் விடுங்கள். ஆள வேண்டியவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்,”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு, அறிவுறுத்துகின்றார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் இன்று பொருட்களின் விலை விண்ணைத்தொட்டுள்ளது. தேநீராக இருக்கலாம், பனிஸாக இருக்கலாம், சோற்று பார்சலாக இருக்கலாம் சாதாரண மக்களுக்குரிய அனைத்து பொருட்களுமே அதிகரித்துவருகின்றது. பாதீட்டு மூலமாக சரியான தீர்வை இந்த அரசாங்கம் முன்வைக்கும் என்கின்றனர். நம்பவே முடியாது.

நாட்டை நிர்வகிக்க முடியவில்லை என்றால், பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், ஆளமுடியவில்லை என்றால், போய்விடுங்கள். சரியானவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.” – என்றார் மனோ கணேசன்.