வாய்த்தர்க்கம் முற்றம் ; கையை வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம்!

0

கிளிநொச்சி- கண்டாவளை பகுதியில் குடும்பத் தகராறு ஏற்பட்டதில் ஒருவருடைய கை துண்டாடப்பட்டுள்ளது.

காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற கை கலப்பு முற்றியதன் காரணமாகவே கை துண்டாடப்பட்டுள்ளது. மாமனார் மருமகனுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது ஆத்திரமடைந்த மருமகன் மாமனாரின் கையை கொடூரமாக வெட்டி ஆற்றில் வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கை துண்டாடப்பட்டவர் 64 வயதுடைய கருணாமூர்த்தியென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த உறவினர்கள் காயமடைந்தவரை உடனடியாக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.