பசிலின் பட்ஜெட் ; பீரிஸ் வெளியிட்ட கருத்து!

0

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் (Basil Rajapaksa) முன்வைக்கப்படவுள்ள முதல் வரவுசெலவுத் திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் (G.L.Peiris) தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிற்கும் 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் வகையில் வரவுசெலவுத் திட்டம் உள்ளதாக ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பல துறைகளுக்கும் நிதியை சிறப்பான முறையில் விநியோகிப்பதன் மூலம் ஒரு புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.