அநுராதபுரம் விவசாயிகளை சந்தித்த சஜித்!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் “கொவி ஹதகெஸ்ம”நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றொரு கட்டம் அநுராதபுரம் கலாவெவ தொகுதியில் உள்ள எப்பாவல கட்டியாவ பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது அங்கு காய்கறி செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளைச் சந்தித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் கடியாவ விவசாய மக்கள் குடியேற்றத் திட்டத்தின் நிறுவுனர் முன்னாள் பிரதமர் டி.எஸ் சேனாநாயக்கவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார முன்னாள் அமைச்சர்களான சந்திராணி பண்டார, பி.ஹரிசன் , கலாவெவ தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அனில் ரத்நாயக்க மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.