சசிகலா அதிரடி அறிவிப்பு!

0

விரைவில் வந்து அ.தி.மு.கவினரை சந்திக்க இருப்பதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.

இது தொடா்பாக அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

கட்சி வீணாவதை ஒரு நிமிஷம் கூட கட்சியை வளா்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.

எல்லோரும் அதிமுக பிள்ளைகள் தான். முன்னாள் முதல்வா் எம்.ஜி.இராமசந்திரன் (MG Ramachandran) எப்போதுமே கட்சியில் வித்தியாசமே பாா்க்கமாட்டார்.

இவர்களா? அவர்களா? என்றெல்லாம் பாா்க்கமாட்டார். அதனை எல்லாம் பாா்த்து தான் வளர்ந்து வந்திருக்கிறோம். என்னைப் பொருத்தவரை எல்லோரும் ஒன்று தான். எல்லோரும் நம் பிள்ளைகள் தான்.

அ.தி.மு.க என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள்.

கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்கள் தொண்டர்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும்.

இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள்.

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.