ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவில் 16 பேருக்கு கொரோனா!

(செய்தி - எம்.செல்வராஜா பதுளை நிருபர்)

0

ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவில் 16 பேருக்கு, கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியம் சுதர்சன் தெரிவித்தார்.

தொற்று உறுதியான 16 பேரும், அவர்தம் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்புக்களின் அடிப்படையிலேயே, மேற்படி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தியத்தலாவை பொது சுகாதார சேவை பணியகத்தில் ஹப்புத்தளை பிரதேசத்தின் 80 பேருக்கு ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இப் பரிசோதனைகளின் அறிக்கைகளுக்கமைய, 16 பேர் கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியிருப்பமை தெரிய வந்துள்ளது.

கடந்த 15 தினங்களாக, கோவிட் 19 தொற்று பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதிருந்த நிலையில், நேற்று திடீர் ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.