‘மெனிக்கே மகே ஹித்தே’ யொஹானிக்கு அடித்த மற்றுமொரு அதிஸ்டம்!

0

‘மெனிக்கே மகே ஹித்தே’ பாடல் மூலம், உலகப் புகழ்பெற்ற இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா இந்தியாவில் நேரடி இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

எதிர்வரும் 30, முதல் ஒக்டோபர் 03 ஆம் திகதிகளில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

புதுடெல்லிக்கருகிலுள்ள, ஹரியானா குருகிராம் நகரிலுள்ள ‘ஸ்டூடியோ எக்ஸ்ஓ’ அரங்கில் எதிர்வரும் 30 ஆம் திகதியும்

தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரிலுள்ள ‘ ஹார்ட் கப் கொஃபி’ அரங்கில் ஒக்டோபர் 03 ஆம் திகதியும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் யொஹானி பங்குபற்றவுள்ள இசை நிகழ்ச்சிக்கு ‘ Supermoon #NowTrending’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் யொஹானியின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இது குறித்து டுவிட்டரில் யொஹானி தெரிவிக்கையில்,

‘இந்தியாவில் பாட வேண்டுமென நான் எப்போதும் விரும்பியிருந்தேன். இறுதியில் அது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு கிடைத்த அதிஸ்டம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘மெனிக்கே மகே ஹித்தே’ பாடல் தினம் தினம் புதிய மைல்கல்லை எட்டுவதுடன், இந்த பாடல் மூலம் இளம் பாடகி யொஹானியின் வாழ்க்கையும் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.