மயானம் வேண்டும் பூண்டுலோயாவில் போராட்டம்!

(தகவல் : நீலமேகம் பிரசாந்த்)

0

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா நகர பொது மயானத்தை அகற்ற வேண்டாமென குறித்த பகுதி மக்கள் போராட்டமொன்றை நேற்று முன்னெடுத்தனர்.

பூண்டுலோயாலோயாவில் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் புதிய பஸ் தரிப்பிட நிலையத்துக்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டப்பட்டு மண் வெட்டப்படுகின்ற நேரத்தில் அருகில் இருந்த மயானமும் வெட்டி அகற்றப்பட்டதோடு பிணங்களின் எலும்புகளும் மேல் வர தொடங்கியுள்ளது.இந்நிலையில் குறித்த பகுதி மக்கள் மயானத்தை விட்டு ஏனைய இடங்களில் மண்ணை வெட்டுமாறும் மயானம் வேண்டுமெனவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பூண்டுலோயா பொலிசார் மற்றும் கொத்மலை பிரதேச சபை தலைவர் சுசந்த தலையிட்டு மயானத்தை அகற்ற வேண்டாமெனவும் மயானத்தை விடுத்து ஏனைய பகுதிகளில் பஸ் தரிப்பிட வேலைத்திட்டத்தைமுன்னெடுக்குமாறும் குறிப்பிட்டார்.