உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு

0

ஒரே நாளில் அதிகளவானோருக்கு தடுப்பூசி வழங்கியதால் இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் ட்விட்டர் பதிவொன்றில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 05 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டமையையிட்டு உலக சுகாதார ஸ்தாபனம் இந்த வாழ்த்தை பதிவிட்டுள்ளது.குறிப்பிடத்தக்க அடைவுமட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கமும் சுகாதார அமைச்சும் அடைந்திருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.