அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து அரச ஊழியர்களும் வழமைப் போல பணிகளில் ஈடுபடுவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சினால் 02/2021 (III)என்ற சுற்றறிக்கை நேற்று (30) வௌியிடப்பட்டது.

அதன்படி, கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவற்காக அரச அலுவலகங்களுக்கு குறைந்த ஊழியர்களுடன் மற்றும் வீடுகளில் இருந்து பணி புரிவது தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது.