உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்வோம்”

0

வைரஸுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

இதன்படி ஆயுர்வேத திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூலிகைப் பானமான ‘பிராண’ என்ற மூலிகை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவத் துறையின் மூத்த பேராசிரியர் ஜெயந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்த மூலிகையானது வேகமாக பரவி வரும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா போன்றவற்குகு எதிராக போராட உடலின்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் கூறுகையில்,

பண்டைய மருத்துவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளின் அடிப்படையில் ‘பிராண’ என்ற மூலிகையானது இயற்கையாகவே நன்மை பயக்கும் மருத்துவ பானமாகும். இது மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கு பலத்தை கொண்டுள்ளது.

சமூகத்தில் வேகமாகப் பரவி வரும் பல்வேறு வகை வைரஸ் விகாரங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, உடலின் முதன்மை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்த நாட்களில் புதிய விகாரங்களுடன் வேகமாக பரவும் கொவிட் போன்ற வைரஸ்களிலிருந்து பாதுகாக்க உடலில் அதிக அளவு முதன்மை நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது.

இதன்படி பிராண மூலிகை பானம் குறித்து நாங்கள் நாங்கள் இரண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். முதல் ஆராய்ச்சி இது உடலில் எந்தவிதமான  பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தியது. இரண்டாவது ஆராய்ச்சி இது உடலின் முதன்மை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது என்பது உறுதியாது.

எவ்வாறாயினும் கொவிட் வைரஸின் விளைவுகள் குறித்து நாம் இதுவரை ஆராய்ச்சி செய்யவில்லை என்றாலும், உடலின் முதன்மை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் எந்தவொரு வைரஸிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.அவ்வாறு நொயெதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதன் மூலம் கிருமிகளை எதிர்த்துப் போராட உடலுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஆயுர்வேத மருத்துவர் பிரதீபா திசாநாயக்க கூறுகையில்,

ஆயுர்வேத திணைக்களம் உள்ளூர் மூலிகைகள் அடங்கிய மூலிகை மருந்தை நோயெதிர்ப்பு சக்தியாக அங்கீகரித்துள்ளது.இது சுவாச அமைப்பு தொடர்பான பிற நோய்களுக்கும் பயன்படுத்தப்படலாம். ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி, மிளகாய், மிளகு,திப்பிலி, சர்க்கரை போன்ற பொருட்களையே இது கொண்டுள்ளது என்றார்.