இலங்கைக்கு மீண்டும் அடித்தது அதிஷ்டம்!

0

இரத்தினபுரி − இறக்குவானை பகுதியிலிருந்து 80 கிலோகிராம் எடையுடைய நீல நிற இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளது.

இவ்வாறு கிடைத்த இரத்தினக்கல்லை, சீனாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஏல விற்பனையில் விற்பனை செய்வதற்காக, உரிமையாளர் குறித்த கல்லை, தேசிய இரத்தினக்கல் அதிகார சபையிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த கல் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது என உரிமையாளர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கஹவத்தை பகுதியில் 510 கிலோகிராம் எடையுடைய சுடார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியாக நீல நிற இரத்தினக்கல் அண்மையில் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.