ஹட்டனில் 30 பேருக்கு கொரோனா தொற்று!

(செய்தி - ஹட்டன் கே.சுந்தரலிங்கம்)

0

ஹட்டன் டிக்கோயா நகரசபை பிரிவில் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பொது மக்கள் முறையான சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடிக்க தவறிவருகின்றமையே இதற்கு காரணம் என சுகாதார பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த தினங்களில் மேற்கொண்ட 43 பிசிஆர் பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

இதில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் டிம்புல்ல, தும்புறுகிரிய,பண்டாரநாயக்க டவுன்,புரூட்யில் ,தரவலை கீழ்பிரிவு ,எம்.ஆர் டவுன், காமினிபுர ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 30 பேர் தொற்றாளர்களாக இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் நெருக்கமான உறவுகனை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் நேற்று (28) திகதி நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து நீதி மன்ற செயப்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அவருடன் நெருக்கமாக பழகிய 10 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படாதமையினால் இன்று (29) திகதி மீண்டும் நீதி மன்ற செயப்பாடுகள் வழமைக்கு திருமிபியுள்ளன.

தொற்றுப்பரவலை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனின் பொது மக்கள் சுகாதார பழக்கவழக்களை கடுமையாக கடைபிடிக்கை வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.