இஸ்லாமிய மக்களுக்கு செந்தில் தொண்டமான் ஹஜ் பெருநாள் வாழ்த்து!

0

இறை உணர்வோடும், தியாக சிந்தனையோடும் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படும் பக்ரீத் திருநாளான இந்த நன்னாளில் உலக வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்பதை பறைசாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம் நபி இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.

இப்றாஹீம் நபி அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்க ளும் இறைவனுக்காக மேற்கொண்ட பெரும் அர்ப்பணிப்புகளை நினைவுகூர்ந்து உலக வாழ் முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இத்திருநாளை கொண் டாடுகின்றனர்.

நபிகள் நாயகம் அளித்த போதனைகள், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உன்னதமான நோக்கங்கள் என்பதை உணர்ந்துள்ள அவர்கள், அதன் வழி நின்று – அடி பிறழாமல் பின்பற்றி – இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

இந்த திருநாளில், திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, உலக வாழ் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த தியாக பெருநாளை மகிழ்ச்சியுடனும் இந்தத் தருணத்திற்குரிய சுய சுகாதார பாதுகாப்புகளுடனும் கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி, மீண்டும் ஒரு முறை எனது ஹஜ்ஜி பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் தமது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.