ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பு!

0

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் இரண்டாவது தடவையாகவும் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு தடவை மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளதாக கடந்த தேர்தலின் போது தெரிவித்த தீர்மானத்திலிருந்து விலகி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச அல்லது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் போட்டியிடுவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பு இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போதே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக கோட்டாபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

தனது கொள்கையை செயற்படுத்த எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு மேலதிகமாக, 5 ஆண்டுகள் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ச சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதியாக தெரிவானமை குறிப்பிடத்தக்கது.