ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் ; ஆசிரியர் விடுதலை முன்னணி!

(செய்தி - தலவாக்கலை பி.கேதீஸ்)

temp4
0
temp1

அதிபர்,ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு கைது செய்யப்பட்டு தனி மைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்களை விடுவிக்கும் வரை தொடரும் எனவும் மனிதாபிமானமற்ற இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தின் மீதும் தனது கண்டனத்தையும் தெரிவிப்பதாகவும் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.

temp

கொரோனா தொற்று காரணமாக தற்போது இணையத் தளம் ஊடாக கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 12.7.2021 திங்கட்கிழமை முதல் இணையத் தள கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலக அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்தன.

கடந்த வாரம் பத்தரமுல்லை பொல்துவ சுற்றுவட்ட சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கைது செய்யப்பட்டு, தனி மைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையத்தள கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் வெளியேறினர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமக்கு நியாயமான முடிவு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.

temp2