பொகவந்தலாவ,ஹட்டன் பகுதிகளில் 57 பேருக்கு கொரோனா!

(செய்தி - அட்டன் கே.சுந்தரலிங்கம்)

0

பொகந்தலாவ பொதுசுகாதார வைத்திய பிரிவு மற்றும் அம்பகமுவ பொதுசுகாதார வைத்திய பிரிவுகளுக்குட்பட்ட பகுதியில் 57 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ சுகாதாரப் பிரிவில் நேற்று வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் படி 42 பேரும் அம்பகமுவ பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட சமனலகம, ஹட்டன் சுற்றுப்புற வீதி , புறுட் ஹில், கந்தையா கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் 15 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஹட்டன் பகுதியில் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 16 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.