நச்சற்ற மரக்கறிகளை தயாரிக்கும் கொட்டகலை யதன்சைட் விவசாயிகள்!

(செய்தி - ஹட்டன் கே.சுந்தரலிங்கம்)

0

இரசாயன உரத்திற்கு பதிலாக செயற்கை பசளையை பயன்படுத்தி நாட்டுக்கும் விட்டுக்கும் நச்சற்ற உணவை பெற்றுக்கொடுத்து வருவதாக கொட்டகலை யதன்சைட் பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தங்களது விவசாயத்திற்குத் தேவையான உரத்தையும் செடிகளுக்குத் தேவையான மருந்து வகைகளையும் இயற்கையிலிருந்தும் மாட்டுப்பண்ணையிலிருந்தும் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தினை கொண்டு செய்து தங்களது விவசாயத்தினை நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர்.

இயற்கை பசளையை தயாரித்து நல்ல வருமானத்தை பெற்றுவருவதாகவும் இதன்மூலம் பலருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்திருப்பதாகவும் பெருமாள் செங்கத்திர்ச்செல்வன் தெரிவித்தார்.

நீண்ட காலமாக செயற்கை பசளை உற்பத்தியில் ஈடுப்பட்டுவரும் இவர், பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமன்றி கொழும்பு போன்ற பிற நகரங்களுக்கும் தான் உற்பத்தி செய்யும் பசளையினை விற்பனை செய்தும் வருகிறார்.

இவருடைய நடவடிக்கையினை கண்காணித்து மேலும் பல விவசாயிகள் தங்களது விவசாயத்திற்கு தேவையான இந்த பசளையினை அவர்களே தயாரித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இவர்களால் நாட்டப்பட்டிருக்கு மிளகாய் ,லீக்ஸ்,கோவா உள்ளிட்ட மரக்கறி செடிகளும் நன்கு வளர்ந்துள்ளன.
இவர்கள் அனைவரதும் ஒரே நோக்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நச்சற்ற மரக்கறிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதாகும்.