ரணிலின் ஆட்டம் இன்று ஆரம்பம்!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இந் நிலையில் அவருக்கு 16ஆம் இலக்க ஆசனம், அதாவது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அருகே உள்ள ஆசனம் தெரிவுசெய்யப்பட்டிருந்தது. எனினும் ஆசனம் மாற்றப்படுவது பற்றி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற அலுவல்கள் பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பிவைத்திருப்பதாக அறியமுடிகின்றது. அவரின் அந்தக் கோரிக்கைக்கு அமைய, தற்சமயம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 13ஆம் இலக்க ஆசனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த 13ஆம் இலக்க ஆசனத்தில் இதற்கு முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இரா.சம்பந்தனுக்கு அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அருகே ரணில் விக்கிரசிங்கவுக்காக ஒதுக்கப்பட்ட 16ஆம் இலக்க ஆசனம் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.