பதுளையில் காய்கறிகளின் விலை அதிகரிப்பு

(செய்தி - பசறை நிருபர்)

0

பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் பதுளை நகரில் உள்ள பிரதான காய்கறி சந்தைகளில் காய்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக காய்கறிகளை கொள்வனவு செய்ய வரும் பொது மக்கள் ஓரிரு காய்கறிகளை மட்டும் வாங்கிக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்புவதை அவதானிக்க முடிகின்றது.

தம்புள்ளை, நுவரெலியா,பண்டாரவளை ஆகிய காய்கறி மொத்த விற்பனை சந்தைகளில் இருந்து காய்கறிகள் பிரதான நகரங்களுக்கு கொண்டு வரப்படாமையின் காரணமாகவும், காய்கறி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாகவும் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கறி மிளகாய், லீக்ஸ், கரட் போன்றவை கிலோ ஒன்று 240இற்கு விற்கப்படுவதுடன் ஏனைய காய்கறிகள் கிலோ ஒன்று 200 இற்கு விற்கப்படுகின்றன. பயணத் தடை காரணமாக வருமானம் இழந்துள்ள பொது மக்கள் காய்கறிகளின் விலை அதிகரிப்பால் தாம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.