சமூக பரவலை கண்டறிய பதுளை மாவட்டத்தில் பி.சீ.ஆர் பரிசோதனை!

(பசறை நிருபர்)

0

பதுளை மாவட்டத்தில் உள்ள பதுளை, ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் கிராம அலுவலர் பிரிவுகளில் கொரோனா வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக எழுமாறாக பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி இன்று பதுளை பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் உடவெல, வியதிகுன, தெல்பெத்த, ஹிங்குருகமுவ,கிளன்-அல்பின் மற்றும் மலங்கமுவ பகுதிகளில் வசிக்கும் 200இற்கும் அதிகமானோருக்கு பசறை வீதி, 3ம் கட்டையில் உள்ள உடவெல மைதானத்தில் பி.சீ.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊவா ஐலண்ட்ஸ் தோட்டத்தில் உள்ள தோட்ட மக்கள் 190பேருக்கு எழுமாறாக பி.சீ.ஆர் பரிசோதனை நேற்று(22 ) தோட்ட பிணியாய்வு நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சந்திரமோகன் தெரிவித்தார். இதேவேளை பதுளை மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பதுளை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் நேற்று(22) தடுப்பூசிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.