கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகருக்கு

0

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை நாளைய தினம் (22) சபாநாயகருக்கு ஒப்படைக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்தார்.

நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு இன்று பாராளுமன்றில் கூடியது.

10 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் கடந்த தினம் குறித்த நம்பிக்கை இல்லா பிரேரணை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.