டயலொக்கின் 3ஆம் கட்ட நிவாரணப்பணிகள் ஆரம்பம்!

temp4
0
temp1

டயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண மருத்துவமனைகளுக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்குவதுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு உலர் உணவு பொதிகளையும் விநியோகிக்கிறது.

தனிமைப்படுத்தப்படடுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவர்களுக்கு அவசியமான நேரத்தில் ஆதரவளிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, டி.வி. தெரண உடன் இணைந்து, மருத்துவமனைகளுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக ‘ டயலொக் உடன் மனுசத் தெரண’ முயற்சியின் 3 வது கட்டத்தை ஆரம்பித்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோயின் மோசமான விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய முயற்சிகளை ஆதரிப்பதற்காக டயலொக் நடத்தி வரும் பல திட்டங்களில் ஒன்றாக இந்த நாடு தழுவிய திட்டமும் மேற்கொள்ளப்படுகின்றது.

temp3

இந்த 3 வது முயற்சியானது மே மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இதனை இரண்டு வாரங்களுக்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளின் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவை தவிரஇ தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களகு;க உலர் உணவு பொதிகளை விநியோகிப்பதையும் இது இணையாக கொண்டுள்ளது.

இந்த முயற்சியானது டயலொக் ஏற்பாடு செய்த முன்னைய முயற்சிகளையே பின்பற்றுகின்றது. நாட்டில் கொரோனா வைரஸின் முதல் இரண்டு கட்டங்களை போன்று இலங்கையர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது.

temp

முதலாவது ‘டயலொக் உடன் மனுசத் தெரண’ முயற்சி 22 மாவட்டங்களில் 400க்கும் அதிகளவான கிராமங்களில் உள்ள 128,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு சுமார் 6 வாரங்கள் உலர் உணவு பொதிகளை விநியோகித்ததுடன், இரண்டாவது முயற்சியானது 22 நாட்களில் 10 மாவட்டங்களில் 46,000 பேரை உள்ளடக்கியிருந்தது.

உலர் உணவு பொதிகளை கொள்வனவு செய்தல், பொதி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய அனைத்து செயற்பாடுகளும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க அரசாங்க சுகாதார அதிகாரிகள் கட்டளையிட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படியே முன்னெடுக்கப்படுகின்றன.

தொற்று நோய் மருத்துவமனையின் (IDH) இயக்குனர் டாக்டர் ஹசிதா அத்தநாயக்க ஊடகங்களிடம் பேசிய போது, இத்தகைய காலங்களில் நாளாந்த நடவடிக்கைகளுக்கும் மருத்துவமனையின் சுகாதாரத்தை பராமரிப்பதற்கும் ஒருங்கிணைந்து அத்தியாவசிய பொருட்களை தாராளமாக நன்கொடையாக வழங்கிய ‘டயலொக் உடன் மனுசத் தெரண’ க்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். நாட்டில் கோவிட் -19 வைரஸ் பரவியதில் இருந்து ‘டயலொக் உடன் மனுசத் தெரண’ பல்வேறு சந்தர்ப்பங்களில் எங்களுக்கு ஆதரவளித்திருக்கிறது, மேலும் அவர்களின் ஆதரவு நாட்டில் வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதில் ஒரு முக்கிய காரணியாக செயற்படுகின்றது.

ஒரு பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனம் என்ற வகையில் டயலொக், நாட்டில் கோவிட் -19 இன் முதல் அறிகுறிகளின் போது சிக்கலான சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 2000 இலட்சத்தினை வழங்கியது. இந்த உறுதிமொழியானது, நீர்கொழும்பு மருத்துவமனை மற்றும் ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் முழுமையாக செயற்படக்கூடிய 10 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகளை (ICU) நியமிக்க உதவியதுடன் கோவிட்-19 தொற்றுநோயை ஒரு தேசமாக எதிர்ப்பதற்கான கூட்டு முயற்சியை வலுப்படுத்தியது.

temp2