இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தலைவர் தெரிவு!

0

ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

2021 அம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான இரண்டு வருடத்திற்கான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (20) காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

இதன்போதே இவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.