கொரோனா பாதிப்பு: தமிழக நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம்!

0

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழக நகைச்சுவை நடிகர் பாண்டு மரணமானார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.