இந்தியாவில் இருந்து இலங்கை வர தடை!

0

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு நபருக்கும் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.