கர்ணன் படம் ஓடிடியில் ரிலீஸ்!

0

தனுஷ் நடிப்பில் கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான கர்ணன் படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, நட்டி நட்ராஜ், யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற மே 9-ந் தேதி கர்ணன் படம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. இதேபோல் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படமும் வருகிற ஜூன் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.