Banner After Header

மலையக மக்கள் முன்னனி சுயநினைவற்று செயற்படுகிறது!

இ.தொ.கா இளைஞர் அணி தலைவர் ராதாவுக்கு பதிலடி

0

மலையக மக்கள் முன்னனி சுயநினைவற்று செயற்படுவதோடு, சமூகத்தை தவறாக வழிநடத்தவும் முற்படுகின்றதென இ.தொ.காவின் இளைஞர் அணி தலைவர் ராஜாமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மலையக மக்கள் முன்னனியின் இளைஞர் மாநாடு இடம்பெற்றது. அதன் போது ம.ம.மு தலைவரால் மலையக இளைய தலைமுறை அரசியல்வாதிகளை விமர்சித்து கருத்து வெளியிடப்பட்டது. இளைய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பது தவறான விடயம் என்பதை போல ராதாகிருஸ்ணன் கருத்து இடம்பெற்றது. இதனை இளைய தலைமுறை அரசியல்வாதி என்ற ரீதியிலும் இ.தொ.கா இளைஞர் அணி தலைவர் என்ற ரீதியிலும ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும். அதே போன்று ம.ம.முன்னனியின் இளைஞர் அணி எவ்வாறு இந்த கருத்தை ஏற்றுக்கொண்டனர் என்பது சரச்சைக்குரியதே.

Banner After Header

மலையகத்தின் இளம் அரசியல்வாதியாக களமிறங்கிய முதல் தேர்தலில் பாரிய வெற்றியை பெற்ற எமது இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தற்போது பாரிய சேவைகளையும் அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார். கடந்ந அரசாங்கத்தின் முக்கிய பங்காளியாக இருந்த மலையக அரசியல்வாதிகளால் பெற்றுக்கொடுக்க முடியாத தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார். இதுவே இளம் அரசியல்வாதியின் சாதனை. அத்தோடு பல்வேறு பாதைகள் இன்று காபட் பாதையாகின்றது.இதுவும் இளம் அரசியல்வாதியின் சாதனை. ஆனால் கடந்த காலத்தில் வெத்துவேட்டு அரசியல் செய்தது யார் என்பதை மக்கள் விரைவில் உணர்த்துவார்கள். எனவே வெறுமனே அரசியல் காழ்புணர்ச்சியில் கருத்து வெளியிடுவது நகைப்புக்குரியது.

அத்தோடு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் காட்டிகொடுப்பு செய்த ஒருவரை மேடையில் விமர்சித்தது உண்மை, அவரை விமர்ச்சித்த விதம் தவறு என்பதை எமது பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனை அரசியலாக்கியவர்கள் தான் தற்போது மேடைகள் ஒட்டுமொத்த இளைஞர்களையும் விமர்சிக்கின்றார்கள். அத்தோடு தற்போது இ.தொ.கா வின் முயற்சியால் மலைய இளைஞர் யுவதிகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலைப்பெற்றுக்கொடுப்பதை விமர்சிக்கின்றார்கள். இவ்வாறு விமர்சிப்பவர்கள் கடந்த அரசின் முக்கிய பங்காளிகளே, எனவே அப்போது இவர்கள் அரச வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்து இருந்தால் இன்று தனியார் நிறுவனங்களிள் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்க தேவை இருந்திருக்காது.

எனவே அரசியல் காழ்புணர்ச்சியில் அறிக்கை விடுவதை தவிர்த்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனபதையே நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதே போன்றே மலையக மக்கள் முன்னனியின் இளைஞன் அணி செயலாளர், அரசியல் அனுபவம் இன்றியும் முதிர்ச்சியற்ற வகையில் அறிக்கை வெளியிடுகின்றார். இவர் கடந்த காலத்தில் த.மு.கூட்டனியின் பிரதான தலைமைகளால் ஓரம் கட்டபட்டவர். எதோ தற்போது தமது அரசியல் இருப்பை தக்க வைக்கவும் அரசியல் அடையாளத்திற்கும் அறிக்கை விடுவது என்பது வேடிக்கையானது. இவர் கருத்து மக்கள் மத்தியில் எடுபடாத ஒன்று என்பதை ம.ம.மு இளைஞர் அணி செயலாளர் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.