Banner After Header

பல்கலைக்கழகங்கள் மீள் திறப்பு ஒத்திவைப்பு!

0

நாட்டில் காணப்படும் சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்கள் மீள் திறப்பை இரண்டுவாரங்களுக்கு பிற்போடுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

Banner After Header

பல்கலைக்கழகங்களை எதிர்வரும் 27ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானித்திருந்தோம். என்றாலும் இன்று காலை சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமும் நாட்டில் காணப்படும் சுகாதார நிலைமைகளையும் கருத்திற்கொண்டு மேலும் இரண்டுவாரங்களுக்கு பல்கலைகழங்கள் திறப்பை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.