Banner After Header

நீங்கள் ஒரு சீட் பொலிடீசியன்!

- சாணக்கியனிடம் வெளிப்படையாக கூறிய ராதா -

0

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு கடந்த 17ம் திகதி நுவரெலியா சினிசிட்டா அரங்கில் இடம்பெற்றது.இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் பதுளை மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்ற ஹரின் பெர்னான்டோ மாநாட்டில் கலந்துக்கொள்வதாக மலையக மக்கள் முன்னணி அறிவித்திருந்தது.

ஆனால் இருவரும் இளைஞர் மாநாட்டிற்கு சமூகமளிக்கவில்லை. குறிப்பாக சாணக்கியன் நுவரெலியா வரை சென்று மாநாட்டிற்கு செல்லவில்லை. இதனால் பெரும் ஏமாற்றத்தை மலையக மக்கள் முன்னணி சந்தித்ததோடு கட்சிக்குள்ளும் சில பல கருத்து வேறுபாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

Banner After Header

இதனால் மனம் நொந்திருந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராகிருஸ்ணனை இன்று பாராளுமன்ற அமர்வின் போது சந்திக்க சென்ற சாணக்கியன் சற்று நிற்குமாறு கூற சீட் பொலிடீசியனிடம் பேசுவதில்லை என ராதாகிருஸ்ணன் நேரடியாகவே கூறியுள்ளார்.
மேலும் ஹரின் பெர்னான்டோ தான் வருகைக்தராமைக்கான காரணத்தை விரைவில் அறிவிப்பதாக கூற இப்படி நம்பி அழைத்தமைக்கு நல்ல பதில் கொடுத்துள்ளீர்கள் இனி நானும் இணைந்து செல்வது பற்றி யோசிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆக மொத்தம் மலையக மக்கள் முன்னணி விரைவில் மாற்று முடிவை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
www.malainaadu.lk