Banner After Header

மொழிப்பன்மைவாதமும் மலையகத்தில் பொதுச்சேவையும் ; அருள்கார்க்கி!

(ஆய்வு - அருள்கார்க்கி)

0

இலங்கையில் ஒவ்வொரு பிரஜைக்கும் தமது சொந்த மொழியில் பொதுச்சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதற்கு இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொழிக் கொள்கையை வினைத்திறன் வாய்ந்த வகையில் நடைமுறைப்படுத்துவது முக்கியமானதாகும். பன்மைத்துவ கலாசாரத்தை கொண்ட ஒரு நாடாக இலங்கை எதிர் கொண்ட பல கசப்பான அனுபவங்களுக்கு மொழிப்பிரச்சினையே பிரதானமானது.

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் பன்மைத்துவமான கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கும் மொழிப்பன்மைவாதம் உறுதிப்படுத்தபட வேண்டும். சிறுபான்மைச் சமூகங்களை பொறுத்தவரையில் தமது தாய்மொழியில் அரச சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான சட்டங்கள் அமுலில் இருந்தாலும் நடைமுறையில் பல்வேறு சவால்கள் நிலவுகின்றன. அந்தவகையில் மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்கள் தமது சொந்த மொழியில் பொதுச்சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும், எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

Banner After Header

ஒரு பன்மைத்துவ சமூகத்தை கட்டியெழுப்புவதானது இன, மத, மொழி, பால்நிலை போன்ற விடயங்களுடன் நெருக்கமான புரிதலை ஏற்படுத்துவதாகும். அந்தவகையில் மலையக மக்கள் எனப்படுவோர் இந்நாட்டின் முக்கியத்துவமிக்க ஒரு இனக்குழுவாகவும், தேசிய பொருளாதாரத்தில் நேரடித் தொடர்புடையோருமாவர். அவர்களின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நகர்வுகளில் தாய்மொழியானது அடிப்படையான விடயமாக அமைந்துள்ளது. புவியியல் ரீதியாக மத்திய மலைநாட்டையும் தெற்கு, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் இனப்பரம்பலை கொண்டுள்ள மலையக மக்கள் இவ்வனைத்து பிரதேசங்களிலும் பெரும்பான்மைச் சிங்கள மக்களுடன் இணைந்தே தமது அன்றாட பொதுக் கடமைகளை ஆற்றுகின்றனர்.

எனவே இவர்கள் பொதுச் சேவைகளை அணுகும் போது தாய்மொழியில் தமது சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதில் பிரதானமானது பிரதேச செயலகங்களிலும், மாவட்ட தொழில் அலுவலகங்களிலும், அவர்கள் எதிர்நோக்கும் மொழிப்பிரச்சினையாகும். எனவே இவ்வாய்வு பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருந்தோட்டங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

“சிங்களம் தெரியாத நால எனக்கு தனியா போய் எப்டி இத செய்ரதுனு தெரியல” , “ நுPகு காச எடுத்துக்க முடியல” , “ அவங்க சொல்றது சரியா வெளங்கல அதுநால எனக்கு உதவி தேவைப்படுது” போன்ற கூற்றுக்கள் எமக்கு ஆய்வு செய்த பெருந்தோட்ட பிரதேசங்களில் கேட்கக்கூடியதாக இருந்தது. இவையனைத்தும் தமது ஊழியர் சேமலாப நிதியை மீளப்பெற்றுக் கொள்ள இம்மக்கள் எதிர்கொள்ளும் சவால்களில் மொழியின் தாக்கமாகும். தோட்டக் காரியாலயங்களிலும், மாவட்ட தொழில் அலுவலகங்களிலும் பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.

ஒரு சில தமிழ் பேசும் ஊழியர்கள் இருந்தாலும் இவர்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள போதுமான ஆளணியில்லாத காரணத்தினால் அனேகமானோர் தமது சேமலாப நிதியை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை கைவிடும் நிலையும் இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சரியான தகவல்களை பெற்று முறையாக இவர்கள் ஆவணங்களை தயாரிப்பதற்கும் இந்த மொழிப்பிரச்சினை அடிப்படையாக உள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டங்களில் ஊழியர் சேமலாப நிதியை மீளப்பெற்றுக் கொள்வதில் மக்களிடம் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்.

இல தோட்டம், மொழிப்பிரச்சினை, ஆவணங்களின்மை வேறு காரணங்கள்

1 கோனாகலை 06 02 01
2 மாக்கந்தை 05 04 –
3 கொஸ்லாந்தை 05 03 02
4 மீரியபெத்தை 05 04 03
5 அம்பிட்டிகந்தை 06 02 02
மொத்தம் 27 15 08
சதவீதம் 54 % 30 % 16 %

ஹல்துமுல்லை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களில் 5 பேரை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது பல்வேறு குறிகாட்டல்களை வழங்குகின்றது. அதில் பிரதானமானது தமது ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக் கொள்ள முடியாதவர்களில் 54% சதவீதமானோருக்கு ஆவணங்களின்மையும் எஞ்சிய 16% சதவீதமானோருக்கு வேறு காரணங்களும் தமது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை மீள பெற்றுக் கொள்ள சவாலான விடயங்களாக உள்ளன.
இவ்விடயத்தில் 54% சதவீதமானோருக்கான மொழிப்பிரச்சினையானது 5 தோட்ட பகுதிகளில் பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டது. இவர்களின் கருத்துப்படி தோட்ட காரியாலயங்கள் முதல் மாவட்ட தொழில் திணைக்களம் வரை மொழிப்பிரச்சினையால் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடர்படுகின்றனர். ஊழியர் சேமலாப நிதியை மீளப்பெற்றுக் கொள்வதற்கான படிவம், மற்றும் துணைச்சான்றிதழ்களின் தேவைப்பாடுகள் என்பவற்றை இவர்கள் பெரும்பான்மை சிங்கள மொழியிலேயே ஆற்றவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இருமொழிக் கொள்கை நாட்டில் அமுலில் இருந்தாலும் அது நடைமுறை சாத்தியப்படாத இவ்வாறான பல இடங்கள் தொடர்பாக ஆழமான ஆய்வுகள் அவசியம்.

இந்நாட்டின் அரசகரும மொழிகள் தொடர்பில் ஒட்டுமொத்த சட்டவாக்க மற்றும் கொள்கை ரீதியான கட்டமைப்பை எடுத்துக்காட்டும் தற்போதைய 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் 3 ஆம் அத்தியாயத்தில் சமத்துவம் பற்றிய 12 (2) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “எந்தவொரு பிரஜைக்கும் இனம், மொழி, மதம், சாதி, பால்நிலை, அரசியல் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய எந்தவொரு காரணங்களுக்காகவும் எந்தவொரு பிரஜையும் ஓரம்கட்டப்படலாகாது.”

மேலும் அரசியலமைப்பின் மொழி உரிமை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள நான்காவது உறுப்புரை 18 ஆவது அரசியலமைப்பின் கீழ் அரசகரும மொழி சிங்களமாகும். மேலும் 13 ஆவது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் தமிழ் மொழியும் அரசகரும மொழியாகும் என குறிப்பிடப்படடுள்ளது.

அதற்கமைய பல்லின கலாசார மற்றும் மதப் பின்னணியை கொண்ட இலங்கை போன்ற ஒரு நாட்டின் சமூகப் புரிந்துணர்வு, பன்மைத்துவம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு போன்ற அடிப்படை விடயங்களை நிலை நாட்டுவதற்கு உரிய சட்டéர்வமான பொறுப்பு அரசுக்கே உள்ளது. மொழி எனும் விடயப்பரப்பு மற்றும் அதனுடன் அரசியலமைப்பு ஏனைய கொள்கை ரீதியான ஏற்பாடு மூலம் மொழி தொடர்பாக இருக்க வேண்டிய தொலைநோக்கு மிகத் தெளிவாக காணப்பட்டாலும் இலங்கையில் அனைத்து பிரஜைகளும் எதிர்ப்பார்க்கும் சேவையையும், ஒருமைப்பாட்டையும் ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் அங்குள்ள நடைமுறைச் சிக்கல்கள் வேறுவிதமாக உள்ளதை ஆய்வு செய்வதனூடாக அவதானிக்க முடியுமாக இருந்தது.

இந்த ஆய்வு தொடர்பாக பதுளை மாவட்ட தொழில் திணைக்களத்தின் சிரே~;ட தொழில் அலுவலர் திருமதி. சுஜாதா குமாரி அவர்களிடம் கருத்துகள் வினவப்பட்டது. அவரின் கூற்றுப்படி, பெருந்தோட்டங்களில் ஆரம்பக் காலங்களில் மொழி தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக காணப்பட்டதாகவும் தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலம் தமது நிறுவனம் மொழிப்பிரச்சினையை சமாளிக்கும் கட்டத்துக்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

மேலும் தற்சமயம் தமது தொழில் திணைக்கள கிளையில் மூன்று தமிழ் மொழிமூல ஊழியர்கள் சேவையில் இருப்பதாகவும் அதில் ஒருவர் (ஊடயiஅ டீசயnஉh) கூற்றுக்கிளையில் பணியில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றார். ஆனால் ஓருவரை கொண்டு முகாமைத்துவம் செய்வது கடினமானது என்றும் உடன்படுகின்றார். ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொள்ளும் படிவம் தொடர்பான விளக்கங்கள் சிங்கள மொழியில் வழங்கப்பட்டாலும் அவற்றுக்கான தெளிவுப்படுத்தல்களை தமிழ் மொழியில் தாம் வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்விடத்தில் இலங்கையில் அரசகரும மொழிக் கொள்கையை சரியான முறையில் அமுல்படுத்துவதற்கு அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண மற்றும் பிரதேச நிர்வாக பொறிமுறைகள் போன்ற அனைத்து நிறுவன கட்டமைப்புக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அத்தியாவசியமாகும் என்பது தெளிவாகின்றது. அந்தவகையில் அரசகரும மொழிக் கொள்கையை சரியான முறையில் அமுல்படுத்தும் பொறுப்பு 2009.09.25 ஆம் திகதி 1620ஃ27 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 2009.11.25 ஆம் திகதி 18ஃ2009 இலக்க சுற்றுநிருபத்தின் மூலம் குறித்துரைக்கப்பட்டுள்ளதை தாம் அவதானிப்பதும் அவ்வாறான அமுல்படுத்தல்களின் நடைமுறைச் சாத்தியத்தன்மை இன்னும் கீழ்மட்டத்தில் இருப்பதும் பதுளை மாவட்ட தொழில் திணைக்களத்தின் நிலை மூலம் புலப்படுகின்றது. இந்த உதாரணம் ஏனைய அரச திணைக்களங்கள், நிறுவனங்களிலும் பாரிய வேறுபாடு நிலவ வாய்ப்பில்லை. அரசகரும மொழிக்கொள்கையை அமுல்படுத்துவதின் ஆரம்ப கட்டமான அறிவித்தல்கள் மற்றும், படிவங்களில் கூட அப்பணி ஆரம்ப கட்டத்தை கடக்கவில்லை என்பது புலப்படுகின்றது.
மேலும் திருமதி. சுஜாதா குமாரியின் அவதானிப்புப்படி பெருந்தோட்ட மக்களின் பிரதான பிரச்சினை அவர்களின் தொழில் வழங்குனர்களான பெருந்தோட்ட கம்பனிகள் முறைமைப்படுத்திய கோவைகளை பேணுவதில் உள்ள சிக்கல் தன்மையானதாகும். அதாவது பொதுவாக தோட்டங்களில் ஒரே பெயரைக் கொண்ட பலர் உள்ளனர். எனவே அவர்களின் சரியான முழுப்பெயரை தோட்ட நிர்வாகங்கள் வழங்கினாலே எம்மால் சரியாக வேலைகளை செய்ய முடியும். இல்லையென்றால் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவர்கள் முகங்கொடுக்க நேரிடும். இது அவர்களுக்கு மேலதிகமாக பல பணிகளை ஆற்றவேண்டிய நிலையை கொண்டு வரும். அதேபோல் எமது தொழில் அலுவலர்கள் தோட்டங்கள் தோறும் விஜயம் செய்வார்கள். அதன்போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தொழில் அலுவலர்களுக்கூடாக தீர்த்து கொள்ள முடியும். ஆனால் அதில் தமிழ் உறுப்பினர்கள் போதுமானளவு இல்லை. இருமொழி தேர்ச்சி பெற்றவர்களும் குறைவாகவே உள்ளனர். எனவே இவர்களைக் கொண்டு அனைத்து தோட்டங்களிலும் இப்பணியை முன்னெடுப்பது சிரமமான காரியமாகும். சிலநேரங்களில் நாம் நடமாடும் (ஆழடிடைந ளநசஎiஉந) மூலமாக ஊழியர் சேமலாப நிதி தொடர்பான சேவைகளையும் வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.
அதேப்போல் ஒரு சில பயனாளிகளின் சேமலாப நிதிய கணக்கில் காணப்படும் சட்ட சிக்கல்களையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தொழில் நியாய சபையில் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. எனவே மொழிப்பிரச்சினை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேசமயம் எமது பணிகளை சவாலான சூழலிலும் கொண்டுச் செல்வதற்கான உபாயங்களை இனங்கண்டுள்ளோம். ஊழியர்களை பொறுத்தவரையில் ஆவணங்களை முறையாக பராமரிப்பதும் படிவங்களை சரியாக நிரப்புவதனை உறுதிப்படுத்துவதும் அவசியம். இதே பொறுப்பு தோட்ட நிர்வாகங்களுக்கும் உள்ளது. ஊழியர்கள் தமது தரவுகளை சரியாக வழங்குவதும், அதனை தோட்ட நிர்வாகங்கள் முறையாக பதிவு செய்வதும் மிகமிக அவசியம். அதேபோல் தோட்டங்களில் ஊழியர் தினங்கள் (டுயடிழரச னுயல) மூலம் ஊழியர் – தொழில் வழங்குனர் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவும் முடியும் என்றார். அதேபோல் மொழி பிரச்சினை காரணமாக சேமலாப நிதியை பெற்றுக்கொள்வதற்கான பணிகளை பெரும்பாலான ஊழியர்கள் முகவர்கள் ஊடாக அதிக பணம் செலுத்தி மேற்கொள்வதாகவும் தமக்கு முனைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
தொழில் அலுவலரின் கூற்றுப்படி மொழி அமுலாக்கல் விடயத்தில்தான் சிக்கல் தன்மை இருப்பது தெளிவாக புலப்படுகின்றது. கடந்த காலங்களில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு மூலம் அரச நிறுவனங்களில் மொழித் திட்டம் தயாரிக்கும் வழிகாட்டல் கைந்நூல் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. அதில் மொழி அமுலாக்கம் தொடர்பாக பிரதான நான்கு துறைகள் தொடர்பாக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அவையாவன:
1. அரசகரும மொழிக் கொள்கையின் அமுலாக்கத்தை பிரதிபலித்தல்.
2. நிருவாகமும் ஆவணங்களைத் தயார்ப்படுத்தலும்.
3. சேவை வழங்குதல்.
4. நிறுவன ரீதியான அர்ப்பணிப்பும் உதவிப் பொறிமுறையும்.
என்பவையாகும்.
அரசகரும மொழிக்கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்தும் போது மேற்குறிப்பிட்ட முக்கிய துறைகளின் கீழ் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதே பன்மைத்துவத்தை பேணுவதன் அடிப்படையாகும். இதிலுள்ள நடைமுறை சிக்கல்கள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதே எமக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் பெறக்கூடிய அனுமானமாகும்.
அமைச்சுக்களின் மட்டத்தில் அரச மொழிக் கொள்கை சேவை வழங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வொன்றின் போது பல்வேறு தரவுகள் கிடைக்கப் பெற்றன. அவற்றை இங்கு உதாரணமாக காட்டலாம். அதாவது தமிழ் மொழியில் சேவை வழங்க முடியாத சந்தர்ப்பங்களில் மாற்றீடாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

மேற்கொள்ளப்படும் நடவடிக்கை , சதவீதம்

தமிழ்மொழி அறிந்த அலுவலர் ஒருவரை நியமித்தல்ஃ அவரின் உதவியை பெறல் 51%
ஆங்கில மொழியில் உரையாடல் 12.2 %
சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் உரையாடல் 2 %
நேரடியாக குறிப்பிட்ட பிரிவிற்கு அனுப்பி சேவை வழங்குதல் 2%
பதில் வழங்காத சந்தர்ப்பங்கள் 32.7 %
மூலம் : தேசிய மொழிகள் ஆணைக்குழு (2017)

இத்தரவுகளின் படி சேவை பெறுவதற்காக அமைச்சுக்களும் வருகைத் தரும் சேவை பெறுனர்களுக்கு தமிழ் மொழி யறிந்த அலுவலர் ஒருவரை நியமிப்பதன் மூலமாகவும் அவரின் உதவியை பெறும் வகையிலும் 51% சதவீதமான எண்ணிக்கையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறான நிலைமையை பதுளை மாவட்ட தொழில் திணைக்களத்தின் சிரேஸ்ட தொழில் அலுவலரும் தெரிவித்தார்.

அதேபோல் தமிழ் மொழியில் பதில் வழங்காத சந்தர்ப்பங்கள் 32.7% சதவீதம் காணப்படுவதையும் இத்தரவுகளினூடாக பகுப்பாய்வு செய்ய முடியும். இதே நிலைமையே அனைத்து அரச நிறுவனங்களிலும் காணப்படுகின்றது. எனவே அரச மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தலானது பொதுச்சேவையை சொந்த மொழியில் பெற்றுக் கொள்ளும் வகையில் இன்னமும் முழுமைப்படுத்தப்படவில்லை என்று மக்களின் கூற்றுக்கு பொருந்திப் போகின்றமையை இப்பகுப்பாய்வினூடாக அவதானிக்க முடியும்.

மேலும் இவ்விடயங்கள் தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி திரு. தம்பையா அவர்களிடம் வினவிய போது அவர் பின்வருமாறு தமது கருத்துக்களை தெரிவித்தார். ஆரம்பகாலங்களில் மலையக தொழிற்சங்கங்கள் பலமானவையாக இருந்தன. மக்களின் சேமநலன் தொடர்பான பிரச்சினைகளை அவர்களே கையாண்டனர். அக்காலங்களில் அரச பொதுச் சேவைகளை ஆங்கில மொழியிலேயே அதிகமாக ஆற்றினர். இது தொழிற்சங்கங்களின் கடமையாகவே பார்க்கப்பட்டது. எனினும் இன்று சிங்கள மொழிக்கு அரசகரும விடயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. எனவே சிறுபான்மை மொழி பேசும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பிரதானமானது மலையக மக்கள் பொதுச்சேவைகளை அணுகும்போது எதிர்கொள்ளும் இடர்பாடுகளாகும். இதற்கு பலமான தொழிற்சங்கங்களும் அரசியல் ரீதியாக தமிழ் மொழியை உரிய இடத்துக்கு கொண்டு வராததுமே காரணமாகும். பிரதேச செயலகங்களிலும், தொழில் திணைக்களங்களிலுமே பெருந்தோட்ட மக்கள் அதிகமாக சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக செல்கின்றனர். இங்கு விநியோகிக்கப்படும் படிவங்களில் இருந்து மொழிப்பிரச்சினை ஆரம்பமாகின்றது.

நாட்டில் காலத்துக்கு காலம் வெளியிடப்படும் மொழிக் கொள்கைக்கு அமைய அரச திணைக்களங்களில் நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டால் இந்நிலைமையை முகாமைத்துவம் செய்திருக்கலாம். ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பொறுப்பற்ற நிர்வாகம் காரணமாக மக்கள் இடர்படுகின்றனர். அதேபோல் மொழிப்பெயர்ப்பு அலகு அனைத்து அரச நிறுவனங்களிலும் ஸ்தாபிக்கப்படவேண்டும். அதேபோல் தொழிலாளர் சட்டங்களில் (டுயடிழரச டுயற) திருத்தங்கள் கொண்டு வரப்படல் அவசியம். குறிப்பாக தொழிலாளர்களின் மொழியில் அவர்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமை அடிப்படை உரிமையொன்றாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். என்றார்.

அத்துடன் பெரும்பான்மை சிங்கள அலுவலர்களுக்கு தமிழ் மொழிப் புலமை இல்லை. இருமொழியில் சேவை வழங்குவதற்கான இயலுமையுடைய ஊழியர்களை அந்தந்த பிரதேசங்களை மையப்படுத்தி சேவையில் அமர்த்துதல் அவசியம். அதேபோல் அனைத்து ஊழியர்களும் இரண்டாம் தேசிய மொழியில் தேர்ச்சி அடைவதனை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும் என்கின்றார் சட்டத்தரணி இ.தம்பையா அவர்கள்.
இவ்விடயம் தொடர்பாக இல.01ஃ2014 (iii) 2016.05.16 திகதி வெளியிடபட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை மூலம் மற்றைய அரசகரும மொழித் தேர்ச்சியை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் குறிப்பிட்ட எழுத்து பரீட்சைக்கு தோற்றுவதற்கு அலுவலர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் தொடர்பாகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேபோல் இல. 04ஃ2014 இலக்கமிடப்பட்ட முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கையானது (2014.09.25) அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட நிறுவனங்கள், அரசாங்க வங்கிகள் மற்றும் முழுமையாக அரசுக்கு சொந்தமான கம்பனிகள் என்பனவற்றின் உத்தியோகத்தர்களுக்கான அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தலும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை செலுத்துதல் தொடர்பான ஏற்பாடுகளை உள்ளடக்கி வெளியிடப்படடுள்ளது.

இவ்வாறான அரசாங்க அறிவித்தல்கள் எந்தளவிற்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்தே இருமொழி சாத்தியப்பாடு தங்கியுள்ளது. மேலும் நேரடியாக தமிழ் ஊழியர்களை இனரீதியான பிரதேச விகிதாசாரங்களுக்கு ஏற்ப சேவையில் இணைத்துக்கொள்வதே நிரந்தரமான தீர்வாகும் என்கின்றார் சட்டத்தரணி இ.தம்பையா அவர்கள்.

மலையக மக்களின் பல்வேறு சமூக, பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டுள்ள கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிறைவேற்று இயக்குனர் பெ. முத்துலிங்கம் அவர்களின் கருத்துப்படி 1990 களுக்கு முன்னர் பெருந்தோட்ட மக்களின் தரவுகள் வாய்மொழி மூலமாக வழங்கப்பட்டன. அடையாள அட்டை இன்மை, முறையான பிறப்புச் சான்றிதழ் இன்மை, தகவல்களின் சந்தேகத்தன்மை உள்ளிட்ட காரணங்களினால் அவர்களின் தகவல்களை முறைமைப்படுத்துவது சிக்கலான நடைமுறையாக காணப்பட்டது.

அந்நிலைமையை மாற்றுவதற்கு பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் அரசுக்கும் வாய்ப்பிருந்தது. எனினும் சிறுபான்மைச் சமூகமென்பதால் அவ்வாறான வேலைத்திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. பெருந்தோட்டங்களில் அமைந்துள்ள அரச நிறுவனங்கள் அனைத்திலும் தமிழ் மொழியில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை.

இவ்வாறு பெருந்தோட்டங்கள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் உள்ள அரச நிறுவனங்களில் தமிழ் மொழி மூலமான ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதே இப்பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கும் வழிமுறையாகும். படிவங்கள், பெயர்ப்பலகைகள், மொழி உதவியாளர், மொழிப்பெயர்ப்பாளர் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் படிப்படியாக தேசிய மொழிக்கொள்கைக்கு அமைய அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். தமிழ் ஊழியர்களை நியமித்தலுடன் மட்டுமல்லாது அவர்களுக்கான பொறுப்புகள், கடமைகளையும் சரியாக வரையறுத்து கொடுப்பதும் அவசியம். இதற்கு சிறந்த உதாரணமாக பெருந்தோட்ட தொடர்பாடல் அதிகாரி (Pடயவெயவழைn ஊழஅஅரniஉயவழைn ழுககiஉநச) நியமனங்களை குறிப்பிடலாம். அவர்களுக்கான நியமனங்கள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. அவர்களின் பொறுப்புகள், மற்றும் கடமைகள் தொடர்பாக தெளிவான அறிக்கைகள் இல்லை. எனவே அவர்கள் நானாவித ஊழியர்களாக பிரதேச செயலகங்களில் கடமை புரிகின்றார்கள். இவ்வாறான பிரச்சினைகளை நீண்ட கால சீர்த்திருத்த செயலாக்கம் (யுககசைஅயவiஎந யுஉவழைn) ஒன்றின் மூலமாகவே முகாமைத்துவம் செய்ய முடியும் என்கின்றார்.

ஊழியர் சேமலாப நிதியம் மீளப்பெற்றுக் கொள்வது தொடர்பாக பெருந்தோட்ட மக்கள் அதிகமான சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர் என்பது எனது அனுபவத்தின் ஊடாக நான் அறிந்துக்கொள்ள முடிந்தது. மலையகத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக நாம் பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ளோம். சேமலாப நிதியத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை இலகுபடுத்தப்பட வேண்டும். சமகாலத்தில் இச்செயன்முறையை முழுமையாக கணிணி மயப்பபடுத்துவதனூடாக மேலும் வினைத்திறனான வகையில் அரச சேவையை மாற்றியமைக்கலாம்.
ஒரு பன்மைத்துவ நாடான இலங்கையில் அனைத்து மொழிகளுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படும் பட்சத்திலேயே அனைத்து பிரஜைகளும் பன்மைத்துவ கலாசாரத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள். அதில் பிரதானமானது பொதுச்சேவை என்பதால் அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் போது அனைத்து மொழி ரீதியானவர்களுக்கும் சம வாய்ப்பும் அவ்வாறல்லாத சந்தர்ப்பத்தில் விகிதாசார ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும். அரச சேவைகள் ஆணைக்குழுஃ பொது நிர்வாக அமைச்சு போன்ற நிறுவனங்கள் மிக நெருக்கமானதாக செயற்படுதலும் மொழிப்பன்மைத்துவத்தை அபிவிருத்தியடைய செய்யும்.

தற்சமயம் கடமையில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான மொழித்தேர்ச்சி பரீட்சைக்கு மேலதிகமாக புதிய நியமனங்கள் வழங்குதலின் போது மொழித்தேர்ச்சி (எழுத்து, வாசிப்பு, உரையாடல்) போன்றவற்றை அடிப்படை காரணிகளாக கவனத்தில் கொள்வது இச்செயன்முறையின் அடிப்படை நிலையாகும். அதேபோல் பன்மைத்துவ கலாசாரத்தினை நோக்கி நகரவேண்டிய சமூகங்களாக இனம் மற்றும் மொழி ரீதியாக பன்மைத்துவ அடிப்படையில் சமூகங்கள் ஒன்றிணைந்து வாழவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனை அரச சேவை பொறிமுறைக்குள்ளும் நிர்வாக கட்டமைப்புக்கு உள்ளும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பணியாகும்.

அரச பொறிமுறைக்குள் சமவாய்ப்புகள் வழங்கப்படாத போது கீழ்மட்ட சமூகத்திலும் மொழி, இன ரீதியான பாகுபாடுகள் ஏற்படுவது இயல்பாகும். எனவே பன்மைத்துவ கலாசாரத்தினை நோக்கி நகரும் ஒரு நாடாக சிறுபான்மை இனங்களின் மொழியையும், கலாசாரத்தையும் பேணி பாதுகாப்பது ஒரு நாட்டின் முக்கிய பணியாகும். அரசியலமைப்பு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அனைத்து மொழிகளும் சமமான ரீதியில் நடத்தப்படும் நிலைமையை உறுதிப்படுத்துவதே சாதாரண பிரஜைகள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வாய்ப்பாக அமையும்.

இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஊழியர் சேமலாப நிதியை மீள பெற்றுக்கொள்ளும் விடயத்தில் ஹல்துமுல்லை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் பெறுபேறுகளை பெருந்தோட்ட பிரதேசங்கள் அனைத்திலும் தொடர்புபடுத்தி பார்க்கலாம். எனவே இவ்வாறான கீழ்மட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரச நிர்வாக கட்டமைப்பில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதேபோல் அரசியலமைப்பு ரீதியாகவும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.