Banner After Header

1000 ரூபாவை பெற்றுக்கொடுத்த இ.தொ.காவுக்கு 40 ரூபாவைவும் பெற்றுக்கொடுக்க தெரியும்!

0

1000 ரூபா பெற்றுக்கொடுத்த இ.தொ.காவிற்கு மேலதிக கொழுந்திற்கான 40 ரூபா கொடுப்பனவை எவ்வாறு பெற்றுக்கொடுப்பதென்று தெரியுமென பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதல் இன்றுவரை இ.தொ.கா மக்கள் உரிமைகளை போராடிப் பெற்றுக்கொடுத்ததாகவே சரித்திரம் உள்ளது. மற்றவர்களை போல் கையேந்தி நின்றதாக சரித்திரம் இல்லை.

Banner After Header

தற்போது கொளுந்து அதிகமாக இருக்கும் காலம் எனவே மக்களின் மேலதிக கொடுப்பனவு விடயத்தில் கம்பனிகள் மாற்று வழியின்றி அடிபணிந்து தான் செல்ல வேண்டும். மறைந்த தலைவர் கெளரவ ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் முன்மொழிவுக்கு அமைய 1000 ரூபாவிற்காக இ.தொ.கா முழுமூச்சுடன் செயற்பட்டு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுத்தது போல, முழுமையான கொடுப்பனவுகளும் பெற்றுத்தரப்படும் என செந்தில் தொண்டமான் அவர்கள் தெரிவித்தார்.

நேற்று முதல் புதிய சம்பள அதிகரிப்பு தொடர்பாக ஊவா மாகாணத்தில் உள்ள பல தோட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் அவர்கள் விஜயம் மேற்கொண்டு, மக்களுடன் கலந்துரையாடியதுடன், தொழிலாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்காத தோட்டங்களில் இனிவரும் காலங்களில் மேலதிக வேலைகளில் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என தெட்டந்தெளிவாக அந்த அந்த தோட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.