Banner After Header

கம்பனிகள் தோட்டங்களில் அட்டூழியம் ; கொதித்தெழுந்த இராதா!

0

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதாக தோட்டத்தொழிலாளர்கள் நசுக்கப்பட்டால் வீதியில் இறக்கி போராடுவோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வே .இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

Banner After Header

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கொடுப்பதாக கூறிவிட்டு மலையக மக்களை பாதாள படுகுழியில் தள்ளிவிடும் சூழல் உருவாகியுள்ளது. சம்பள நிர்ணய சபையில் 900 ரூபா பிளஸ் நூறு ரூபா என்ற அடிப்படையில் ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக்கூறி சம்பளத்தை கொடுப்பதுடன் கம்பனிகள் பல்வேறு அட்டூழியங்களையும், அநியாயங்களையும் மலையகத்தில் செய்வதை பார்க்கின்றோம்.

இந்த மாதம் சம்பளத்தை பெற்றுக்கொள்ள மக்கள் செல்லும் போது அவர்கள் கூறும் முக்கியமான விடயம் என்னவென்றால், மேலதிகமாக எடுக்கும் கொழுந்துக்கு பணம் கொடுக்க முடியாது எனவும் 20 கிலோ கொழுந்து பறித்துக்கொடுக்க வேண்டும், ஆண் பெண் சகலரும் கொழுந்து எடுக்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளை கம்பனிகள் முன்வைத்து பல்வேறு இடங்களில் எமது மக்களுக்கு பல்வேறு அநியாயங்கள் இடம்பெற்று வருவதாக கூறுகின்றனர்.

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதாக தோட்டத்தொழிலாளர்கள் நசுக்கப்பட்டால் வீதியில் இறக்கி போராடுவோம் என்றார்.