Banner After Header

புத்தாண்டு பரிசாக 1000 ரூபா கிடைக்கு ; இ.தொ.காவுக்கு வெற்றி!

0

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட இருக்கின்றது. இது இ.தொ.கா க்கு கிடைத்த வெற்றி என்பதை இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமான் சௌமிய பவனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

சௌமிய பவனில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

Banner After Header

சம்பள நிர்ணய சபையின் 1000 ரூபாய் கொடுப்பனவு தீர்மானத்திற்கு எதிராக கம்பனிகள் தாக்கல் செய்திருந்த மனு இன்று உயர் நீதி மன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையில் கம்பனி தரப்பின் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம் இம்மாதம் 27ம் திகதிவரை வழக்கை ஒத்திவைத்தது.

இதன் காரணமாக வர்த்தமானி அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளவாறு பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபாய் சம்பளத்தை பெறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஏற்கனவே நுவரெலியா அரச பெருந்தோட்ட யாக்கம் ஒன்றின் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது இ.தொ.காவின் முயற்சிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

இதேவேளை, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அவர்களுக்கு இ.தொ.கா சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்ற அதேவேளை, குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இதுவிடயத்தில் பொறுமையாக எம்மோடு கைகோர்த்து இருந்தமையால் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.