Banner After Header

அனுசாவுடன் சேரமாட்டேன் : வழமையான பாணியிலேயே என் அரசியல் பயணம்!

0

அனுசா சந்திரசேகரனுடன் சேரப் போவதாகவும் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க போவதாக போலியான செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவ்வாறு எவ்வித எண்ணங்களும் தமக்கு இல்லையென தெரிவித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், வழமையான அரசியல் பாணியிலேயே தமது அரசியல் பயணம் தொடருமென தெரிவித்தார்.

அ.அரவிந்தகுமார் எம்.பி தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து அவரிடம் வினவிய போதே மேறக்ணடவாறு கூறினார்.

Banner After Header

“நான் எப்போதும் என் மக்களுடனே இருக்கிறேன். மக்களுடன் என்னுடன் இருக்கின்றனர். எவரது கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை. மக்களுக்கு மாத்திரமே பதிலளிப்பேன்.

புதிய கட்சியொன்றை தொடங்குவதற்கான தேவை எதுவும் எனக்கு ஏற்படவில்லையென்பதுடன், அனுசா என்னுடன்; பேசியதான செய்திகளும் பொய்யானது. வழமையான பாணியில் மக்களுடன் என் பயணம் தொடரும்” என்றார்.