முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு சென்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று இயற்கை எய்தியுள்ளமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தனது இரங்கல் உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழர்களின் வரலாறு எனவும் அவரின் இழப்பானது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் பேரிழப்பு எனவும் தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமையை நீண்டகாலமாக உணர்த்தி வந்தவர் எனவும் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையோடு வாழ வேண்டும் என்கின்ற பேரவா கொண்டிருந்தார் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.