ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக பிரபல மஹிந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசாக அளிக்கப்படும் என்று கடந்த ஜனவரி அறிவித்திருந்தார். அதன்படி எல்லோருக்கும் கார் பரிசாக சில தினங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தனக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கிய தார் காரை தனது பயிற்சியாளரும் தன்னை ஊக்கப்படுத்தி வருபவருமான ஜெயபிரகாஷுக்கு பரிசளித்து நெகிழ்ச்சியூட்டியிருக்கிறார் நடராஜன்.
பயிற்சியாளர் மீதான நடராஜனின் அன்பை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.