Banner After Header

இந்தியாவை பந்தாடியது இங்கிலாந்து : பறந்த சிக்ஸர்கள்!

0

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.

அகமதாபாத் மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 337 என்ற வலுவான ஓட்ட இலக்கை பெற்றது.

Banner After Header

கே.எஸ்.ராகுல் 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ரிசப் பந்த் 77 ஓட்டங்களையும் அணித் தலைவர் கோலி 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

338 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியுடன் வான வேடிக்கையை நிகழ்த்தியது. அதனால் அரங்கமே அதிர்ந்தது.

ஜொனி ப்ரதிஸ்டோ 124 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன் ஆட்டத்தை போக்கை மாற்றியமைத்த பென் ஸ்டோக் 52 பந்துகளில் 99 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இறுதியில் இங்கிலாந்து 43.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 338 ஓட்டங்களை பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து 20 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் 3 போட்டிகளை கொண்டு ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலை பெற்றுள்ளது. அடுத்தப் போட்டி நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.