Banner After Header

அனல்பறக்கப்போகும் அரையிறுதி ஆட்டம் இன்று!

0

லெஜண்ட்ஸ் உலகத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற உள்ளது.

இந்தியாவின் ராய்ப்பூரில் உள்ளூர் நேரம் படி இரவு 07.00 மணிக்கு இந்த ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியின் வெற்றியாளர் ஞாயிற்றுக்கிழமை (21) இந்தியாவை எதிர்கொள்வர்.

Banner After Header

தொடரின் எட்டாவது போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்ய இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது.