கேகாலையிலுள்ள ஆடை தொழிற்சாலையில் நான்கு பேருக்கு கொரோனா!

0

கேகாலையிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணி புரியும் நான்கு ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேகாலை பொது சுகாதார பரிசோதகர் டபிள்யூ.எம்.அமரதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த தொழிற்சாலையிலுள்ள ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையிலேயே 4பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 70பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமரதிலக கூறியுள்ளார்.