ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

0

முன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முகத்துவாரம் மீன்பிடி துறைமுகம் தொடர்பாக 2014 ஆம் ஆண்டு விலை மனு கோரப்பட்டமை குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் போது முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டமையின் மூலம் அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாக குறித்த மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதிவாதிகளின் கைரேகைகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் குறித்த வழக்கை ஏப்ரல் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.