ஐ.தே.கவின் பதவிகளுக்கு அதிரடி நியமனங்கள்!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பதவிகளுக்காக புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கட்சித் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன கட்சியின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பாலித ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஏ.எஸ்.எம்.மிஸ்பா கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.