மலையகத்தில் கடும் மழை ; வீதிகளில் வெள்ளம் ; போக்குவரத்தும் பாதிப்பு!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து ஹட்டனிலும் அதனை மலையக பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது.

இன்று  மாலை சுமார் நான்கு மணி முதல் பெய்த கடும் மழை காரணமாக கால்வாய்கள் ஓடைகள் நிரம்பி வழிந்தோடின இதனால் ஹட்டன் கொழும்பு பிரதான விதியில் மாணிக்கப்பிள்ளை ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீதி வெள்ளக்காடாக காட்சியளித்தன.

வெள்ள நீர் வீதியில் வழிந்தோடியதன் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தன.

வளைவுகள் நிறைந்த ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தமக்குரிய பக்கத்தில் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

அத்தோடு ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களின் வாகனங்களை செலுத்து வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வாழும் மக்கள் மண்திட்டுக்கு மலைகளுக்கு சமீபமாக இருக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதே வேளை கடும் மழை காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகள் பெருக்கெடுத்துள்ளமையினால் இவற்றிக்கு சமீபமாக வாழும் மக்கள் மற்று இவற்றை கடக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அந்நிலையம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளன.

மழை காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளுக்கு புல் அறுக்க முடியாது மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதுடன் வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பமையும் குறிப்பிடத்தக்கது.